பருத்தித்துறை பாடசாலை மாணவி இதயநாதர் மேரி டிலக்சனா கொலைசெய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையதாக கைதுசெய்யப்பட்ட முக்கிய சந்தேகநபர் உட்பட இருவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு பருத்தித்துறை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
அல்வாயைச் சேர்ந்த காணிக்கைதாசன் (வயது-28) ராசரூபன் (வயது-19) ஆகிய இரு சந்தேகநபர்கள் பொலிஸ் பொறுப்பதிகாரி அபயகோன், குற்றப் புலனாய்வு அதிகாரி எஸ்.வீரவர்த்தன தலைமையிலான பொலிஸ் குழுவினரால் கைது செய்யப்பட்டனர்.
முதலில் கைது செய்யப்படட ராசரூபன் மூலமாக பிரதான சந்தேகநபர் இருக்கும் இடத்தை கண்டுபிடித்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவர்கள் இருவரிடமும் கொலைசெய்யப்பட்ட மாணவி மேரி டிலக்சனா தொடர்பில் பொலிஸார் தீவிரமாக விசாரணைகளை மேற்கொண்டு வந்தனர்.
இந்த நிலையில் சந்தேகநபர்கள் இருவரும் இன்றைய தினம் புதன்கிழமை பருத்தித்துறை நீதவான் திருமதி ஸ்ரீநிதி நந்தசேகரன் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது எதிர்வரும் 14 நாட்களுக்கு அவர்களை விளக்கமறியிலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
