புதன், 8 பிப்ரவரி, 2012

அதிவேக நெடுஞ்சாலை இரும்பு வேலியை சேதமாக்கியதற்காக ரூ.5,34,960 நட்டஈடு

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற முதலாவது வாகன விபத்துச் சம்பவத்தின் போது குறித்த வீதியின் இரும்பு வேலி சேதமாக்கப்பட்டமைக்கு நட்டஈடாக 5 இலட்சத்து 34ஆயிரத்து 960ரூபாவினை செலுத்துமாறு விபத்துக்குள்ளான சாரதிக்கு கெஸ்பாவ நீதிவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேற்படி சாரதி, தனது வாகனத்தை அதி வேகத்தில் செலுத்தியமையாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக நிரூபிக்கப்பட்ட நிலையிலேயே அவருக்கு மேற்படி தொகையை தண்டப் பணமாக செலுத்துமாறு கெஸ்பாவ நீதவான் சமத் மதநாயக்கா தெரிவித்தார்.

கடந்த நவம்பர் மாதம் 28ஆம் திகதி கஹதுடுவ, 8ஆவது மைல் கல்லுக்கு அருகில் வைத்து இந்த வாகன விபத்து சம்பவித்திருந்தது. விபத்துக்கு காரணமாக காலி, போத்தல பிரதேசத்தைச் சேர்ந்த சாரதிக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.