கிழக்கு மாகாண சபை முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனுக்கும் தனக்கும் இடையில் எதுவித விரிசலும் இல்லை என மீள்குடியேற்றப் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.
மீள்குடியேற்ற அமைச்சில் இன்று (02) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அவர், ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
கிழக்கு முதல்வர் சரிவர தனது கடமைகளை செய்தால் எல்லாம் சிறப்பாக அமையும் என அவர் குறிப்பிட்டார்.
அரசியல் தீர்வு நிலைப்பாடு குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் கிழக்கு முதலமைச்சர் சந்திரகாந்தன் பேச்சுவார்த்தை நடத்த தீர்மானித்ததை அடுத்து விநாயகமூர்த்தி முரளிதரன் அவருக்கு அச்சுறுத்தல் விடுத்ததாக ஊடகங்களில் செய்திகள் வெளியானமை குறிப்பிடத்தக்கது.
