இலங்கை உற்பத்திப் பொருட்களுக்கு தமிழக முதல்வர் ஜயலலிதா ஜெயராம் தமிழ்நாட்டில் தடை விதித்துள்ளார் என வெளியான பத்திரிகை செய்தி பொய்யானது என சென்னையில் உள்ள இலங்கை மகாபோதி சங்கத் தலைவர் சங்கைக்குரிய தின்னியாவல பாலித தேரர் தெரிவித்துள்ளார்.
சென்னை மகாபோதியில் இன்று (02) இடம்பெற்ற உடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதேவேளை, தமிழ்நாட்டிற்கு வரும் இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதாக தமிழக பொலிஸார் தெரிவித்துள்ளதாக தேரர் குறிப்பிட்டார்.
