வியாழன், 2 பிப்ரவரி, 2012

இலங்கை வீரர்களை தாக்கிய மூவருக்கு மீண்டும் பிணையற்ற பிடிவிராந்து

இலங்கை கிரிக்கட் அணி வீரர்கள் மீது லாகூரில் வைத்து தாக்குதல் நடத்தியதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ள மூவருக்கு மீண்டும் பிணையற்ற பிடிவிராந்து பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த மூவரையும் கைது செய்து பெப்ரவரி 27-ம் திகதிக்குள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு லாகூர் நீதிமன்றம் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளது.

2009 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட இந்த தாக்குதல் தொடர்பில் 6 பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட ஆறு சந்தேகநபர்களுக்கும் நீதிமன்றம் ஏற்கனவே பிணை வழங்கியது.

இந்நிலையில் தொடர்ந்து இடம்பெற்ற வழக்கு விசாரணைக்கு மூன்று சந்தேகநபர்கள் மாத்திரமே சமூகமளிப்பதோடு மூவர் நீதிமன்றை அவமதித்து செயற்பட்டு வருகின்றனர்.

இதனால் அவர்களுக்கு பிணையற்ற பிடிவிராந்து பிறப்பித்துள்ள நீதிமன்றம், மூவரையும் பெப்ரவரி 27க்கு முன்னர் நீதிமன்றில் ஆஜர் செய்யுமாறு உத்தரவிட்டுள்ளது.