75 சதவீதமான சிங்கள மக்களின் எதிர்ப்பை சம்பாதித்துக் கொண்டு தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு ஒன்றை பெறுவது சாத்தியமற்ற விடயம் என மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.
மீள்குடியேற்ற அமைச்சில் இன்று (02) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
13வது திருத்தச் சட்டத்தில் எதை நீக்குவது எதை உள்ளடக்குவது என்பது தொடர்பில் தீர்மானிக்கவே பாராளுமன்றத் தெரிவுக் குழு நியமிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
மாகாணங்களுக்கு பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை கோருவது அவசியமற்ற விடயம் எனவும் பொலிஸ் அதிகாரத்தை பெற்று வீண் சந்தேகத்தை ஏற்படுத்தக் கூடாது எனவும் அவர் தெரிவித்தார்.
ஜனாதிபதியுடன் ஒன்றிணைந்து செயற்பட்டால் பிரச்சினையை சுமுகமாகத் தீர்க்கலாம் என அவர் கூறினார்.
