மாலைத்தீவின் முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் தற்போதைய ஜனாதிபதி மொஹமட் வஹீட் ஹசனிடம் வேண்டுகோள் விடுத்துள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
மாலைத்தீவு ஜனாதிபதி மொஹமட் நசீட் கடந்த செவ்வாய்க்கிழமை தனது பதவியை இராஜினாமா செய்தார். அவருடைய ஆட்சிக்கு எதிராக மாலைத்தீவில் ஏற்பட்ட கிளர்ச்சியை அடுத்தே மாலைத்தீவு ஜனாதிபதி தனது பதவியை இராஜினாமா செய்தார்.
இதனையடுத்து மாலைத்தீவின் புதிய ஜனாதிபதியாக துணை ஜனாதிபதி மொஹமட் வஹீட் ஹசன் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.
