வியாழன், 9 பிப்ரவரி, 2012

தருஸுமன் அறிக்கை முள்ளிவாய்க்கால் குறித்து முணுமுணுப்பது கேலியாம் - சுசில்

இன்று அநீதிக்கு எதிராக செயற்படும் சிலர் வரலாற்றை மறந்து விட்டதாக அமைச்சர் சுசில் பிரேமஜயந்த் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியிலும் மக்கள் விடுதலை முன்னணி புரட்சியின் போதும் நாட்டில் நீதிபதிகள் கொல்லப்பட்டதாகவும் சில நீதிபதிகள் தாக்கப்பட்டதாகவும் சிலர் நாட்டை விட்டு வெளியேறியதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் இன்று (09) இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

புலிகளால் கொல்லப்பட்ட 60000 பேரை பற்றி கதைக்காத தருஸுமன் அறிக்கை முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற இறுதி யுத்தம் குறித்து முணுமுணப்பது கேலியான விடயம் என அமைச்சர் சுசில் பிரேமஜயந்த் தெரிவித்துள்ளார்.