ஞாயிறு, 5 பிப்ரவரி, 2012

யாழ்ப்பாணம், தாவடிப் பகுதியில் மலசலகூடக் குழியிலிருந்து ஆணின் சடலம் மீட்பு

யாழ்ப்பாணம், தாவடிப் பகுதியில் மலசலகூடக் குழியொன்றிலிருந்து ஆணொருவரின் சடலம் நேற்று சனிக்கிழமை இரவு மீட்கப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சடலத்தில் பாரிய வெட்டுக் காயங்கள் காணப்படுவதாகத் தெரிவித்த பொலிஸார், கொலை செய்யப்பட்டு மலசலகூடக் குழிக்குள் சடலத்தை வீசியிருக்கலாமென தாம் சந்தேகிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

பிரேத பரிசோதனைக்காக சடலம் யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இவரது மரணம் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் சுன்னாகம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.