இலங்கை குறித்த சனல் 4 தொலைக்காட்சியின் காணொளி குறுகிய அரசியல் நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வதற்காக வெளியிடப்பட்ட ஒன்று என ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ரஜீவ விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
குறித்த காணொளி மூலம் சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கள் அடிப்படை அற்றது என அவர் அத தெரணவிடம் தெரிவித்தார்.
இதற்கு முன்னர் சனல் 4 வெளியிட்ட காணொளிகளில் சரத் பொன்சேகா குறித்து கூறப்பட்டதாகவும் இம்முறை காணொளியில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ், பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ் ஆகியோர் குறித்து அதிகம் கூறப்பட்டுள்ளதாகவும் அவர்களே பொறுப்புக்கூற வேண்டியவர்கள் என்று கூறப்பட்டுள்ளதன் மூலம் சனல் 4வின் அரசியல் நோக்கம் தெளிவாவதாகவும் ரஜீவ் விஜேசிங்க குறிப்பிட்டுள்ளார்.
