6.4 கிராம் ஹெரோயினை தன்வசம் வைத்திருந்து போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்ட ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (15) மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.கிரிவல முதலிகே சமிந்த எனப்படும் நபருக்கே நீதிமன்றம் இவ்வாறு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
2007 மார்ச் 14ம் திகதி பேலியகொடையில் கைது செய்யப்பட்ட குறித்த சந்தேபநபர் மீது, 6.4 கிராம் ஹெரோனியை தன்வசம் வைத்திருந்து போதை பொருள் விற்பனையில் ஈடுபட்டதாக சட்ட மா அதிபர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தார்.
நீண்ட விசாரணையின் பின் சந்தேகநபர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டுவிட்டதால் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி பத்மன் சுரசேன மரண தண்டனை விதித்தார்.
மேலும் இந்த வழக்கில் பொய் சாட்சி கூறிய ஜூட் வசந்த என்பவருக்கு 20 வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட இரண்டு வருட கடூழிய சிறை தண்டனை விதித்தார்.
அத்துடன் ஜூட் வசந்தவிற்கு 1,50,000 ரூபா தண்டப்பணம் அறவிட்ட நீதிபதி அதனை செலுத்தத் தவறின் மேலதிக ஒரு வருட சிறை தண்டனை விதிக்கப்படும் எனவும் தீர்ப்பளித்தார்.