கிளிநொச்சி, செல்வநகர் பகுதியில் இடம்பெற்ற கைக்குண்டு வெடிப்புச் சம்பவத்தில் 5 சிறுவர்கள் காயமடைந்துள்ளனர். இக்கைக்குண்டு வெடிப்புச் சம்பவம் நேற்று சனிக்கிழமை காலை இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சிறார்கள் கைக்குண்டை வைத்து விளையாடிக்கொண்டிருந்தபோதே இந்த வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றதாக ஆரம்பக்கட்ட விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளது.
இச்சம்பவத்தில் காயமடைந்தவர்கள் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.
