செவ்வாய், 13 மார்ச், 2012

பிரபாகரன் மகன் கொலை போல பல கொடுமைகள் நடந்துள்ளன: கருணாநிதி கண்ணீர்

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் மகன் சுடப்பட்டது உள்பட பல கொடுமைகள் இலங்கையில் நடந்துள்ளன.

இதனால் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் இந்திய ஊடகமொன்றுக்கு அளித்துள்ள செவ்வி வருமாறு:

கேள்வி: பிரபாகரனின் மகன் சுடப்பட்டு கிடப்பதை இங்கிலாந்து தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று வெளியிட்டு இருப்பதைப் பற்றி?.

பதில்: இதுபோன்ற பல கொடுமைகள் நடந்துள்ளன. அதனால் தான் இலங்கைக்கு எதிராக, அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டுமென்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். தமிழ்நாட்டிலே உள்ள எல்லா அரசியல் கட்சிகளும் இப்பிரச்சனை குறித்து வைத்துள்ள கோரிக்கையை நிறைவேற்ற வேண்டுமென்று இந்திய அரசை கேட்டுக் கொள்கிறேன்.

கேள்வி: இது தொடர்பாக பிரதமரை நீங்கள் சந்திப்பீர்களா?.

பதில்: அவருக்குள்ள வேலைகளை எல்லாம் எண்ணிப் பார்த்துத் தான், இது தொடர்பாக பிரதமரைச் சந்திக்குமாறு பாராளுமன்ற திமுக தலைவர் டி.ஆர். பாலுவை கேட்டுக் கொண்டேன். அதன்படி அவர் சந்தித்துப் பேசியுள்ளார்.

என்று கலைஞர் கருணாநிதி கூறியுள்ளார்.