இலங்கைக்கு எதிரான தீர்மானம் குறித்து பிரதமர் மன்மோகன் சிங் நாளை (14.03.2012) பாராளுமன்றத்தில் பதில் அளிப்பார் என்று, பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பவன்குமார் பன்சால் கூறியுள்ளார்.
முன்னதாக ஜெனிவாவில் ஐநா மனித உரிமைக் கவுன்சிலில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்படும் தீர்மானத்தை இந்தியா ஆதரித்து வாக்களிக்குமா என்பது குறித்து மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்று பாராளுமன்றத்தில் தமிழக எம்பிக்கள் முழக்கமிட்டனர்.
