ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் பதில் பொலிஸ் அதிகாரி ஒருவருக்கு எதிராக லஞ்ச, ஊழல் ஒழிப்புத் திணைக்களத்தால் கொழும்பு நீதவான் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பதில் பொலிஸ் அதிகாரி இந்திக டி சில்வா என்பவருக்கு எதிராகவே இன்று (13) குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
2008ம் ஆண்டு களுத்துறை தெற்கு பொலிஸ் பிரிவில் பொலிஸ் பொறுப்பதிகாரியாக செயற்பட்ட வேளை, குறித்த பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய கிராம பாதுகாப்பு அதிகாரி ஒருவரை தனது சொந்த வர்த்தக நிலையத்தில் கடமையில் ஈடுபடுத்தியதாக இந்திக டி சில்வா மீது லஞ்ச, ஊழல் ஒழிப்புப் பிரிவு குற்றம் சுமத்தியுள்ளது.
இதன்மூலம் அரச சொத்தை அநாவசியமாகப் பயன்படுத்தி பொலிஸ் அதிகாரி ஊழலில் ஈடுபட்டுள்ளதாக அந்தப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.
தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப்பத்திரிகையில் 09 பொலிஸ் உத்தியோகத்தர்கள் சாட்சியாளர்களாக பெயரிடப்பட்டுள்ளனர்.
