செவ்வாய், 13 மார்ச், 2012

சிலாவத்துறை கடலில் வெடிபொருட்களுடன் நால்வர் கைது

மன்னார் - சிலாவத்துறை கடற்பரப்பில் வெடிபொருட்கள் சிலவற்றுடன் நான்கு சந்தேகநபர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சிலாவத்துறை கடற்பரப்பில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த கடற்படையினர் அங்கு படகு ஒன்றை பரிசோதித்துள்ளனர்.

இதன்போது படகில் இருந்து 14 ஜெலக்நைட் குச்சிகள், வெடி மருந்துப் பொதிகள் 8 மற்றும் 15 டெட்டனேட்டர்கள் என்பவற்றை கடற்படையினர் மீட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட நால்வரும் மன்னார் பிரதேசத்தைச் சேர்ந்தவர்களாவர்.

இவர்கள் சிலாவத்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் இன்று (13) மன்னார் நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளனர்.