கொழும்பு குற்றத் தடுப்பு புலனாய்வு பிரிவின் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஐயூப் கானுக்கு யாழ். மேல் நீதிமன்றம் இன்று புதன்கிழமை பிடியாணை பிறப்பித்தது.
கடந்த 2009ஆம் ஆண்டு உரும்பிராய் பகுதியில் வைத்து பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் தொடர்பாக முக்கிய சாட்சியான இவர், ஆறு தடவைகள் நீதிமன்றுக்கு சமுகமளிக்காமையினாலேயே பகிரங்க பிடியாணையை யாழ். மேல் நீதிமன்ற மேல் நீதிமன்ற நீதிபதி ஜே. விஸ்வநாதன் உத்தரவை பிறப்பித்தார்.
கடந்த ஆறு தடவைகள் யாழ். மேல் நீதிமன்றத்தினால் அழைப்பு விடுக்கப்பட்டும் மன்றுக்கு ஆஜராகாமலும் அதற்கான காரணம் குறிப்பிடாமையினாலுமே நீதிபதி பிடியாணை பிறப்பித்தார்.
