புதன், 14 மார்ச், 2012

ஜனாதிபதி அதிகாலை கம்பஹாவுக்கு திடீர் விஜயம்! வீதி அபிவிருத்திகளை நேரில் பார்வை -

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கம்பஹா பிரதேசத்துக்கு அதிகாலை திடீர் விஜயம் ஒன்றை மெற்கொண்டு அங்கு மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்திப் பணிகளை பரிசீலித்தார்.

இதன்போது அண்மையில் திறந்து வைக்கப்பட்ட கம்பஹா - ஒருதொட்ட வீதியில் கறுப்புப் பாலத்திற்கு அருகாமையில் அமைந்துள்ள உடற்பயிற்சிக்கான நடைபாதையை ஜனாதிபதி பார்வையிட்டார்.

முன்னறிவித்தலின்றி திடீரென அங்கு சென்ற ஜனாதிபதி நேற்றைய தினத்தில் (13) தமது காலைவேளை உடற்பயிற்சிகளை அங்கு மேற்கொண்டார்.

சுமார் நான்கு (04) கிலோ மீட்டர் நீளமான இந்த உடற் பயிற்சி நடைபாதை ஊருவல் ஓயாவிற்கு இருபக்கமாக உள்ள பிரதேசத்திலேயே அமைக்கப்பட்டு ள்ளது. இந்நடைபாதையை சுற்றி சுமார் 1500 தாவர வகைகளும் வளர்க்கப்பட்டு ள்ளன.

நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இந்த உடற்பயிற்சி நடைபாதை நிர்மாணிக்கப்பட்டுள்ளதுடன் சுமார் 32 மில்லியன் ரூபா செலவாகியுள்ளது.

தேகாரோக்கியமிக்க பிரஜைகளை உருவாக்கும் ‘மஹிந்த சிந்தனை திட்டத்தின்’ கீழ் நாடு முழுவதிலும் முக்கிய இடங்களில் இவ்வாறான உடற்பயிற்சி நடைபாதைகள் நிர்மாணிக்கப்பட உள்ளதுடன் இவ்வாறான நடைபாதைகள் இரண்டு கம்பஹா மாவட்டத்தில் ஏற்கனவே நிர்மாணிக்கப்பட்டுள்ளன.

இதன்போது ஜனாதிபதி அவர்கள் உடற்பயிற்சியில் ஈடுபட்டிருந்த பொதுமக்களிடமும் கலந்துரையாடினார்.