இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ள இந்திய தென்பிராந்திய பிரதம கட்டளைத் தளபதி லெப். ஜெனரல் ஏ.கே.சிங் நேற்று யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்தார்.
யாழ் விஜயத்தின் போது அவர் வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ. சந்திரசிறியை சந்தித்து உரையாடினார்.
இந்த சந்திப்பின் போது வடமாகாண ஆளுநர் இந்திய தென்பிராந்திய பிரதம கட்டளைத் தளபதிக்கு ஞாபகச் சின்னம் ஒன்றையூம் பரிசாக வழங்கினார்.
