நுவரெலியா - மீபிலிமான பகுதி வீடொன்றில் புதையல் தோண்டும் முயற்சியில் ஈடுபட்டிருந்த இருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நுவரெலியா பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி உள்ளிட்ட குழு மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போது நேற்று (13) மாலை இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் இன்று (14) நுவரெலியா நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
