பதுளை - பசறை பிரதேச சபைக்கு முன்னால் இளைஞர் ஒருவர் கொடூரமான முறையில் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்த கொலை சம்பவம் நேற்று (13) இரவு 09.55 அளவில் இடம்பெற்றுள்ளதாக பசறை பொலிஸார் குறிப்பிட்டனர்.
20 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
கொலை சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை.
பசறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
