அரச வைத்தியசாலைகளின் உதவியாளர் ஊழியர்கள் மேற்கொண்டுவரும் பணிநிறுத்தம் காரணமாக அரச வைத்தியசாலைகளின் வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சைபெற வரும் நோயாளிகளுக்கு வழங்க வேண்டிய மருந்துகள் அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தில் (ஒசுசல) இலவசமாக வழங்கப்படும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
பணிநிறுத்தம் காரணமாக நோயாளர்கள் எதிர்கொள்ளும் அசௌகரியங்களை கருத்திற் கொண்டு இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
