புதன், 14 மார்ச், 2012

இல‌ங்கை த‌மிழ‌ர் ‌விவகார‌த்த‌ி‌ல் பிரதமரின் பதிலில் திருப்தி இல்லை - ஜெயலலிதா

இல‌ங்கை த‌மிழ‌ர் ‌விவகார‌த்த‌ி‌ல் பிரதமரின் பதிலில் அ.தி.மு.க.விற்கு திருப்தி இல்லை எ‌ன்று தமிழக முத‌ல்வ‌ர் ஜெய‌ல‌லிதா கூ‌றியுள்ளார்.

நெ‌ல்லை மாவ‌ட்ட‌ம் ச‌ங்கர‌ன்கோ‌வி‌ல் இடை‌த்தே‌ர்த‌ல் ‌பிரசார‌த்‌தி‌ற்கு புற‌ப்படு‌ம் மு‌ன் செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம் பே‌சு‌ம்போது அவர் இ‌வ்வாறு தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

இலங்கை விவகாரத்தில் பிரதமரிடமிருந்து பதில் கடிதம் வந்துள்ளது எ‌ன்று கூ‌றிய ஜெய‌ல‌‌‌லிதா, இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வலியுறுத்தியுள்ளேன் எ‌ன்றா‌ர்.

பிரதமரின் பதிலில் அ.தி.மு.க.விற்கு திருப்தி இல்லை எ‌ன்று‌ம் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை தொடர்ந்து அ.தி.மு.க ஆதரிக்கும் எ‌ன்று‌ம் ஜெயல‌லிதா கூ‌றினா‌ர்.