இலங்கையில் விபத்துச் சம்பவங்களின் மூலமாக வருடத்திற்கு 12,000 பேர் உயிரிழப்பதாக சுகாதர அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
இவற்றில் நூற்றுக்கு 22 வீதமான உயிரிழப்புக்கள் வாகன விபத்துச் சம்பவங்களின் மூலமாக நேர்வதாக அமைச்சர் சுட்டிக் காட்டினார்.
விபத்துக்களின் மூலமாக உலகம் முழுவதிலும் 5.5 மில்லியன் மக்கள் உயிரிழப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
நேற்று மாலை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இந்த தகவல்களை குறிப்பிட்டார்.
விபத்துச் சம்பவங்களை குறைத்துக் கொள்வதற்கு அதிகாரிகள், மக்கள் என அனைத்து தரப்பினரும் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என அமைச்சர் கேட்டுக் கொண்டார்.