வெள்ளி, 27 ஜூலை, 2012

ஒலிம்பிக் போட்டிகள் இன்று ஆரம்பம்! இலங்கை வீரர்கள் 7 பேர் பங்கேற்பு

30வது ஒலிம்பிக் போட்டிகள் இன்றைய தினம் லண்டன் நகரில் ஆரம்பமாகிறன.

ஒலிம்பிக் ஆரம்பவிழா இலங்கை நேரப்படி இன்று நாள்ளிரவு வேளையில் ஆரம்பமாகின்றது.

இவ்வாண்டு இடம்பெறும் போட்டிகளில் 204 நாடுகளைச் சேர்ந்த பத்தாயிரத்து 500 போட்டியாளர்கள் பங்கேற்கின்றனர்.

இந்த ஒலிம்பிக் போட்டிகளில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி ஏழு போட்டியாளர்கள் பங்குபற்றுகின்றனர்.

இதேவேளை இலங்கை வீரர்களை ஒலிம்பிக் போட்டிகளில் விளையாட அனுமதிக்கக் கூடாது என கோரிக்கை முன்வைத்து லண்டன்வாழ் இலங்கைத் தமிழர்கள் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.