சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவிற்கு தப்பிச் செல்ல முயன்ற 28 தமிழர்களும் 9 சிங்களவர்களுமாக 37 ஆண்கள் கிழக்குக் கடலில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளனர். நடுக்கடலில் வைத்துக் கைதான இவர்களை கடற்படையினர் திருகோணமலைப் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். இவர்கள் திருகோணமலை, மூதூர், யாழ்ப்பாணம் மற்றும் குருநாகல் பிரதேசங்களைச் சேர்ந்தவர்களாவர்.
படகை செலுத்திச் சென்றவர் ஒரு சிங்களவர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.