செவ்வாய், 31 ஜூலை, 2012

மாணவர்களின் ஆளுமையை வளர்ப்பதற்கு முன்பள்ளிகள் ஊடாக போதனைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் - ஈ.யு.ரி நிறுவன தொழிலதிபர்...! (படங்கள் இணைப்பு)

மாணவர்களின் ஆளுமையை வளர்ப்பதற்குத் தேவையான கலை கைத்தொழில் விளையாட்டு நீதிபோதனை முதலிய வகுப்புகள் முன்பள்ளிகள் ஊடாக மேற்கொள்ளப்பட வேண்டும் என சுன்னாகம் ஈ.யு.ரி நிறுவன தொழிலதிபர் திரு வே.ஸ்ரீஸ்கந்தராஜா தெரிவித்தார்.

சுன்னாகம் கிழக்கு சனசமூக நிலையமும் சிவன் முன்பள்ளியும் இணைந்து நடாத்திய வருடாந்த முன்பள்ளி விளையாட்டுப் விழா கடந்த 29.07.2012 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.00 மணியளவில் சுன்னாகம் புகையிரத நிலைய மைதானத்தில் சனசமூக நிலையத் தலைவர் திரு க.கருணைநாயகம் தலைமையில் இடம்பெற்றது. இவ்விழாவில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு பேசும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் முன்பள்ளியின் தேவைகள் இங்கு அதிகமாககச் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. சிவன் முன்பள்ளி காணி உறுதியற்ற காணியாக உள்ளதால் அரச உதவிகளைப் பெறமுடியாதுள்ளது. எனவே எமது ஈ.யு.ரி நிறுவனம் தனது செலவில் மென்வேலி அமைத்துக் கொடுக்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கின்றேன் எனவும் மேலும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக ஜனசக்தி காப்புறுதிக் கூட்டுத்தாபன உதவி முகாமையாளர் திரு மகேஸ்வரன் சசிதரன், சுன்னாகம் கதிரமலை சிவன் தேவஸ்தான பிரதமகுரு முத்தமிழ் குருமணி நா.சர்வேசவரக்குருக்கள் அவர்களும் கௌரவ விருந்தினர்களாக கிராமசேவையாளர் திரு ஏ.எஸ்.சிவானந்தம், திருமதி துரைலிங்கம் உட்பட பலர் கலந்து கொண்டனர். அம்பாள் விளையாட்டுக் கழக உறுப்பினர்கள் அனுசரணையுடன் நிகழ்ச்சி சிறப்பாக இடம்பெற்றது.