புதன், 1 ஆகஸ்ட், 2012

கொழும்பு வந்த தாய்வான் கப்பலின் இந்தோனேசிய பணியாளர் திடீர் மரணம்

தாய்வானில் இருந்து கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த கப்பல் ஒன்றில் பணியாற்றிய இந்தோனேசிய இளைஞர் ஒருவர் திடீர் மரணமடைந்துள்ளார்.

இந்து சமுத்திரத்தின் ஆழ்கடல் பகுதியில் வைத்து கடந்த 2012-07-25ம் திகதியன்று இளைஞர் உயிரிழந்துள்ளதாக நேற்றைய தினம் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த குறித்த கப்பலின் ஊழியர்கள் கூறியுள்ளனர்.

உயிரிழந்த டெரியன்டோ எனப்படும் 27 வயதுடைய இந்தோனேசிய இளைஞனின் சடலம் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டபோது சுகயீனம் காரணமாக உயிரிழந்தமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

சடலத்தை இந்தோனேசியாவில் அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்க இலங்கை நிறுவனம் ஊடாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.