புதன், 1 ஆகஸ்ட், 2012

இலங்கை ஜனாதிபதி மட்டுமல்ல காங்கிரஸ் கட்சியும் போர் குற்றவாளிதான்

தமிழக வாழ்வூரிமை கட்சியின் முதல் அறிமுக கலந்தாலோசனைக் கூட்டம் கரூரில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் காமராஜ் தலைமையில் நடைபெற்றது.

இதில் மாநில அமைப்பு செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான எடப்பாடி வை.காவேரி, கரூர் மாவட்ட அமைப்பாளர் சத்தியமூர்த்தி மற்றும் மகளிர் அணியினர் கலந்து கொண்டனர். கட்சியின் வளர்ச்சிக்காக பல்வேறு ஆலோசனைகளை வழங்கிய காவேரி பேசும்போது,

இலங்கை உள்நாட்டு போருக்கு முன் வேலூர் சிறைச்சாலையில் பிரியங்கா நளினியை சந்தித்து பேசிய பிறகுதான் இந்தியா ராடார்களையும் இராணுவ வீரர்களையும் இலங்கைக்கு அனுப்பியது.


அதன் பிறகு முள்ளிவாய்க்காலில் இலங்கை தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டனர்.

இந்நிலையில் இலங்கை ஜனாதிபதியை மட்டும்தான் குற்றவாளி என்று அனைவரும் கூறிவருகின்றனர்.

ஆனால் போருக்கு தேவையான உபகரணங்களையும் வீரர்களையும் அனுப்பி வைத்த காங்கிரஸ் கட்சியனரும்தான் குற்றவாளிகள் என்று தெரிவித்தார்.