புதன், 1 ஆகஸ்ட், 2012

மாவத்தகம பிரதேச சபைத் தலைவர் உள்ளிட்ட ஐவர் கைது

மாவத்தகம பிரதேச சபைத் தலைவர் உள்ளிட்ட ஐவர் கைதுகுருநாகல் - மாவத்தகம பிரதேச சபையின் தலைவர் உள்ளிட்ட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மாவத்தகம பொலிஸார் குறிப்பிட்டனர்.

கடந்த 29ம் திகதி மாவத்தகமயில் இடம்பெற்ற குழு மோதலுடன் தொடர்புபட்டதான சந்தேகத்தின் பேரிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

இந்த மோதலில் ஒருவர் காயமடைந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மோதலுடன் மாவத்தகம பிரதேச சபைத் தலைவருக்கு தொடர்பு இருப்பதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

முறைப்பாடு குறித்து விசாரணை நடத்தியதன் பின் மாவத்தகம பிரதேச சபைத் தலைவர் உள்ளிட்ட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.