புதன், 1 ஆகஸ்ட், 2012

முச்சக்கரவண்டியில் நடமாடும் விபச்சார சேவை: பெண் உட்பட மூவர் கைது

அலுத்கம - கந்தேவிஹார வீதி முல்லபிட்டியவிற்கு திரும்பும் வழியில் முச்சக்கரவண்டியில் சூட்சமமான முறையில் இயங்கி வந்த நடமாடும் விபச்சார நிலையத்தை பொலிஸார் முற்றுகையிட்டுள்ளனர்.

அலுத்கம பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றை அடுத்து இந்த விபச்சார நிலையம் முற்றுகையிடப்பட்டுள்ளது.

இதன்போது முச்சக்கர வண்டியில் இருந்து இரு ஆண்களும் ஒரு பெண்ணும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட மூவரும் நேற்று 31ம் திகதி களுத்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு 2012-08-08ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.