சென்னையிலிருந்து ரூபா 50 இலட்சம் பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருளை ஆசன வாயில் மறைத்து வைத்து கடத்த முயன்ற இலங்கையர் இருவர் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் இன்று காலை புறப்படத் தயாரானபோது சுங்க அதிகாரிகள் சந்தேகத்தின்பேரில் இவர்களிடம் விசாரணை நடத்தியுள்ளனர். சுற்றுலா விசாவில் இந்தியா சென்ற அவர்களை அழைத்துத் தனியறையில் சோதனை நடத்தியுள்ளனர்.
அதன்போது ஆசன வாயில் மறைத்து வைக்கப்பட்டிருந்த போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டது. இவர்கள் நீண்ட காலமாக போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்துள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக சென்னை விமான நிலையப் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.