உயிர்களைப் பலிகொள்ளும் இருண்ட யுகமொன்று இனியும் இந்த நாட்டில் உருவாக இடமளிக்கப்போவ தில்லை என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார்.
சுதந்திரமாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ வேண்டிய பருவத்தில் இந்த நாட்டு இளையவர்கள் துன்ப துயரங்களை அனுபவித்ததை நாம் மறந்து விடவில்லை. இனியும் அத்தகைய இருள் சூழ்ந்த நிலை ஏற்பட இடமளிக்கப்பட மாட்டாது எனவும் ஜனாதிபதி தெரிவித்தார். பயிற்சியை முடித்துக்கொண்டு வெளி யேறும் தேசிய இளைஞர் படையணியின் மாபெரும் விழாவின் அணிவகுப்பு நிகழ்வு தியகம மஹிந்த ராஜபக்ஷ விளையாட்டரங்கில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த அணிவகுப்பைப் பார்வையிட்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.
நாட்டின் சகல மாகாணங்களையும் சேர்ந்த இளைஞர் படையணி உறுப்பினர்கள் 4500 பேர் தமது பயிற்சிகளை முடித்துக் கொண்டு வெளியேறினர்.
இங்கு திறமையாக பயிற்சியை முடித்தவர்களுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் விருது வழங்கி கெளரவித்தார். அமைச்சர் டளஸ் அழகப்பெரும தேசிய இளைஞர் படையணியின் தலைவர் கேர்ணல் தர்ஷன ரத்நாயக்க உட்பட முக்கியஸ்தர்களும் இளைஞர் படையணியினரின் பெற்றோர்களும் பங்கேற்ற இந்த நிகழ்வில் ஜனாதிபதி மேலும் உரையாற்றுகையில், ஜுலை 19 ஆம் திகதி வரலாற்றில் முக்கியமான நாள். ஜுலை வேலை நிறுத்தம் சாத்தியமற்றுப்போனதால் ஜுலை மாதத்தை ஒரு சுபமான மாதமாக ஏற்றுக்கொள்வதில்லை. எனினும் இளைஞர்களுக்கு இந்த ஜனரஞ்சகமான கருத்து சவாலை ஏற்படுத்த வேண்டும். அந்த சவாலுடன் இளைஞர்கள் ஒன்றிணைய வேண்டும்.
கடந்த காலங்கள் இளைஞர்களுக்கு மிக மோசமான காலங்களாக இருந்துள்ளன. இளைஞர்கள் அதனை ஒரு இருளான காலமாகவே பார்த்தனர். அந்த இருண்ட காலம் இனியும் வரலாற்றில் இடம்பெறாமலிருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவே இந்த நாட்டு மக்களின் பிரார்த்தனையாகும்.
ஒரு நாட்டின் பெறுமதி வாய்ந்த சொத்து தங்கமோ வைரமோ அல்ல. அந்த நாட்டின் இளைஞர்களே என்பதே எனது நம்பிக்கை. அதிலும் இளைஞர் படையணியிலுள்ள உங்களைப் போன்றோர் மேலும் பெறுமதியுடைய வர்கள். உலகில் முன்னேற்றமடைந்துள்ள அனைத்து நாடுகளும் அந்த நாட்டின் இளைஞர் சக்தியால்தான் முன்னேற்றம் கண்டுள்ளன. இளைஞர்களின் பலமும் தைரியமுமே அதற்குப் பிரதான காரணமாக அமைந்துள்ளன. இளைஞர்களின் பலம் அதிகரிக்கும் போது நாட்டின் முன்னேற்றமும் வேகமடைகிறது.
பெற்றோர்களே! இன்றைய காலம் எமது இளைய காலத்தைப் போன்றதன்து. அதியுயர் தொழில்நுட்ப முன்னேற்ற யுகத்தில் இன்றைய இளைஞர்கள் வாழ்கின்றனர். தொழில்நுட்பத்தோடேயே அவர்கள் வாழ வேண்டியுள்ளது. நாம் பெரியவர்களாகவிருந்து அதனைப் புரிந்து கொள்ள வேண்டும். நாம் இளமைப்பருவத்திற்கு அன்பு செலுத்த வேண்டும். பெளத்தம் போதிக்கும் சிறந்த மார்க்கங்கள் உலகிற்கேற்ப நற்பண்புமிக்க இளைஞர்களை நல்வழிப்படுத்துவதற்காக உபயோகப்படுத்தப்பட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.
சமூகத்தில் சிலரது சிந்தனைகள் இதிலிருந்து வேறுபட்டிருக்கலாம். எனினும் பல பரம்பரைகள் வாழ்ந்துள்ள இந்த உலகத்தில் தற்போதைய நடைமுறைகள் திருப்தியுறக் கூடியதாக வேண்டும். யுத்தக் காலத்தில் எமது இளைஞர்கள் நாட்டைக் காப்பதற்காக படை முகாம்களை நாடினர். பெற்றோர்களே நாட்டிற்காக உங்கள் பிள்ளைகள் பட்ட துயரங்களை நாம் மறந்து விட முடியாது.
ஒரு சந்தர்ப்பத்தில் நான் கல்கமுவவுக்குச் சென்ற போது சங்கப்பாலி கிராமத்தில் படை வீரர் ஒருவரின் மரண வீட்டிற்குச் சென்றிருந்தேன். அந்த குடும்பத்தாயின் இரண்டாவது மகனும் நாட்டுக்காக உயர் நீத்திருந்தார். அந்தத் துயரமான சூழ்நிலையிலும் அந்த தயார் கூறியது என்னை நெகிழ வைத்தது. ஜனாதிபதியவர்களே எனக்கு இன்னொரு மகன் மட்டுமே உள்ளார். அவரையும் நாட்டுக்காக நான் படையில் சேர்க்க விரும்புகிறேன்.
தயவு செய்து ஏற்றுக்கொள்ளுங்கள் என என்னிடம் வேண்டினார். எனது மகன் யோசிதவை நான் கடற் படையில் சேர்க்க போன போது அந்த தாய் கூறிய விடயம் என் நினைவுக்கு வந்தது. அவரை படையில் இணைய அனுமதித்தேன். இளைஞர்களே உங்களைப் போன்ற ஆயிரமாயிரம் இளைஞர்களின் அர்ப்பணிப்பும் தியாகமுமே இன்று நாம் இவ்வாறு சுதந்திரமாக நாட்டில் வாழ வழி வகுத்துள்ளது.
அவர்களுக்கு இன்றைய இளைஞர்கள் வழங்கக் கூடிய கெளரவம் ஒழுக்கமும் திறமையுமுள்ளவர்களாக நீங்கள் உருவாவதே. அதற்கான வழிகாட்டலை தேசிய இளைஞர் படையணி வழங்கி வருகின்றது எனவும் ஜனாதிபதி இங்கு மேலும் தெரிவித்தார். இந்நிகழ்வில் அமைச்சர் டளஸ் அழகப் பெருமவினால் ஜனாதிபதிக்கு நினைவுப் பரிசொன்றும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.