சனி, 21 ஜூலை, 2012

அச்சுவேலி கைத்தொழிற்பேட்டை கழிவு நீர் தொடர்பில் முன் ஆராய்வு.(படங்கள் இணைக்கப்பட்டுள்ள)

அச்சுவேலியில் அமையப்பெறவுள்ள கைத்தொழிற் பேட்டை இயங்கும் பட்சத்தில் அங்கிருந்து கழிவு நீரை வெளியேற்றுவது தொடர்பாக  பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் ஆராய்ந்தறிந்து கொண்டார்.

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள பனை அபிவிருத்தி சபையின் தலைமைக் காரியாலயத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற மேற்படி விடயம் தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டது.

இதன்போது தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் கழிவுநீரை சூழலுக்கும், கடலுக்கும் மாசுபடாதவகையில் சுத்திகரிப்பது தொடர்பாகவும் ஆராயப்பட்டது.

இதில் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் சிவஞானசோதி, கைத்தொழில் அபிவிருத்தி சபையின் பொதுமுகாமையாளர் ஜெஸ்மின் மன்னப்பெரும உள்ளிட்டோர் உடனிருந்தனர்.