அரசாங்க வி.ஐ.பிகளின் பெயரை பயன்படுத்தி மக்களை ஏமாற்றும் நபர்களை கைது செய்வதற்காக விசேட விசாரணைக் குழுவொன்றை ஸ்தாபித்துள்ளதாக பொலிஸார் இன்று தெரிவித்தனர்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அமைச்சர் பஷில் ராஜபக்ஷ, பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ ஆகியோரின் பெயர்களை பயன்படுத்தி மக்களை ஏமாற்றிய நபர்களில் குறைந்தபட்சம் 15 பேர் இவ்வருடம் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்தது.
கைது செய்யப்பட்ட நபர்களில் பலர் துறைமுகம், விமான நிலையம் மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சில் வேலை வாய்ப்புபெற்றுத் தருவதாக கூறி மக்களை ஏமாற்றியுள்ளனர்.
அரச மரக்கூட்டுத்தாபனத்தில் பாதுகாப்பு உத்தியோகஸ்தர் தொழிலொன்றை பெறுவதற்காக ஜனாதிபதி மஹிந்த ராபஜக்ஷவின் போலி கடிதத் தலைப்பு, போலி இறப்பர் முத்திரை, போலி கையெழுத்திட்டு கூட்டுத்தாபனத்தின் தலைவருக்கு கடிதம் எழுதிய 31 வயதான நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.