வியாழன், 26 ஜூலை, 2012

5 மனைவியரால் பாலியல் வல்லுறவு வர்த்தகர் பரிதாப மரணம்.

செல்வந்த வர்த்தகர் ஒருவர் தனது ஆறாவது மனைவியிடம் அதிக ஈடுபாட்டைக் காட்டி வந்ததால் பொறாமை கொண்ட ஏனைய 5 மனைவிமாரும் அவரைப் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தி மரணத்தைத் தழுவச் செய்த சம்பவம் நைஜீரியாவில் இடம்பெற்றுள்ளது.

ஒக்படிபோ நகரைச் சேர்ந்த உரோகோ ஒனொஜா என்ற மேற்படி வர்த்தகர் தனது இளைய மனைவியுடன் பாலியல் உறவில் ஈடுபட்டிருந்த வேளை அவரை கத்திகள் மற்றும் கம்புகளுடன் முற்றுகையிட்ட ஏனைய 5 மனைவிமாரும் தம்மையும் தனித்தனியே பாலியல் ரீதியில் திருப்திப்படுத்த அச்சுறுத்தல் விடுத்துள்ளனர்.

 இந்நிலையில் உரோகோ தனது 4 மனைவிகளுடன் அடுத்தடுத்து தொடர்ந்து பாலியல் உறவில் ஈடுபடுவதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளார். ஐந்தாவது மனைவி அவரிடம் வந்த போது அவரது மூச்சு நின்று மரணத்தைத் தழுவியிருந்ததாக நைஜீரிய டெய்லி போஸ்ட் ஊடகத்தை மேற்கோள்காட்டி பிரித்தானிய டெய்லி மெயில் ஊடகம் புதன்கிழமை செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை அதிகாலை 3 மணியளவில் மதுச்சாலையிலிருந்து வீடு திரும்பிய உரோகோ ஒனொஜா, தனது இளைய மனைவியின் படுக்கையறை நோக்கிச் சென்றுள்ளார். ஏனைய 5 மனைவியரும் கணவர் வீடு திரும்பும் முன்னர் தமது உரிமைகளை எவ்வாறு நிலைநாட்டுவது எனக் கலந்துரையாடியிருந்தனர்.

இந்நிலையில் தமது கணவரைப் பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய மேற்படி மனைவியர், கணவர் இறந்து விட்டதையறிந்ததும் காட்டுக்குள் ஓடித் தலைமறைவாகியுள்ளனர்.

அவர்களில் இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏனையவர்களைத் தேடி பொலிஸார் வலை விரித்துள்ளனர்.