ஜனாதிபதியின் கையொப்பம், உத்தியோகபூர்வ கடிதம் மற்றும் உத்தியோகபூர்வ முத்திரை என்பவற்றை போலியாக தயாரித்து அரச உயர் பதவி ஒன்றை பெற்றுக் கொள்ள முயற்சித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் விசேட விசாரணை பிரிவினர் மேற்கொண்ட விசாரணையில் நேற்று 24ம் திகதி மாலை சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் நெலும்தெனிய பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய நலிந்த லியனகே என்பவராவார்.
மரக்கூட்டுத்தாபனத்தில் பாதுகாப்பு அதிகாரி பதவி ஒன்றை பெற்றுக் கொள்வதற்காக ஜனாதிபதியின் கையொப்பம், முத்திரையிடப்பட்ட கடிதத்தை அரச மரக்கூட்டுத்தாபன தலைவரிடம் ஒப்படைத்துள்ளார்.
கைது செய்யப்பட்டவரிடம் இருந்து மீட்கப்பட்ட ஆவணங்கள் வருமாறு:
ஜனாதிபதியின் கையொப்பம், கடிதவுரை, உத்தியோகபூர்வ முத்திரை இடப்பட்டு தேசிய நூதனசாலைக்கு காவலாளியாக இணைத்துக் கொள்ளுமாறு அனுப்பிய கடிதம்.
பாதுகாப்பு சேவை அலுவலக கல்லூரி சப்புகஸ்கந்த முகவரிக்கு அனுப்பப்பட்ட கடிதம்.
கணினி
கலர் பிரிண்டர்
கணினி ஸ்கேனர்
பென்டிரைவ்
நலிந்த லியனகே என்ற பெயரில் அடையாள அட்டை
ஜனாதிபதி மக்களிடம் ஆற்றிய உரை அறிக்கை
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இன்று (25) கடுவளை நீதவான் நீதிமன்றில் ஆஜர்செய்யப்படவுள்ளார்.