புதன், 25 ஜூலை, 2012

யாழ்.குருநகரில் அனுமதியின்றி ஒலிபெருக்கியில் பாடல் ஒலிக்கச்செய்த இளைஞர் இருவர் கைது.

யாழ்.குருநகர் பகுதியில் பொலிஸாரின் அனுமதியின்றி ஒலிபெருக்கி மூலம் பாடல் ஒலிக்கச்செய்த இளைஞர்கள் இருவரை கைது செய்துள்ளதாக குருநகர் பொலிஸார் இன்று புதன்கிழமை தெரிவித்தனர்.

யாழ்.குருநகர் யாகப்பர் ஆலயத் திருவிழாவுக்காக கோயில் பாடல்களை ஒலிபரப்புச் செய்தபோது அவ்விடத்திற்கு வந்த பொலிஸார் அனுமதி எடுக்கப்பட்டுள்ளதா என விசாரணை செய்ததுடன் அவர்களை விசரனைக்காக கைது செய்து பொலிஸ் நிலையம் அழைத்துச் சென்றுள்ளனர்.

ஒலிபெருக்கியும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்படவுள்ளதாக குருநகர் பொலிஸார் தெரிவித்தனர்