புதன், 1 ஆகஸ்ட், 2012

மன்னார் நீதிமன்றம் மீதான தாக்குதல்13 பேருக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்.

மன்னார் நீதிமன்றம் மீது கடந்த 18ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்துடன் கைது செய்யப்பட்ட 13 பேரையும் ௭திர்வரும் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதிவான் ஏ. ஜூட்சன் நேற்று செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டார்.

குறித்த 13 பேரையும் இம்மாதம் 31 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் முன்னர் உத்தரவிட்டிருந்தார். இந்த நிலையில் மீண்டும் நேற்று செவ்வாய்க்கிழமை மன்னார் நீதிமன்றத்திற்கு இவர்கள் ஆஜர்படுத்தப்பட்ட போது, ஆகஸ்ட் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார். மன்னார் நீதிமன்ற பகுதியில் நேற்றைய தினம் பொலிஸாரும் அதிரடிப் படையினரும் விசேட பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.