2012-07-01ம் திகதி தொடக்கம் 2012-07-31ம் திகதி வரையான ஒரு மாத காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையில் 28000 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸ் மா அதிபரின் ஆலோசனையின் படி இத்தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்ட அனைவரும் நீதிமன்றினால் பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் அதிகமாக 7103 பேர் மேல் மாகாணத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டுள்ள நபர்களைத் தேடி தொடர்ச்சியாக நாடு முழுவதும் தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்