வெள்ளி, 31 ஆகஸ்ட், 2012

பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 50,000 பேர் கைது .

கடந்த ஜுலை மாதம் முதலாம் திகதியிலிருந்து நாடு முழுவதிலும் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின்போது பிடியாணை பிறப்பிக்கப்பட்ட சுமார் 50,000 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் மா அதிபர் என்.கே.இலங்ககோனின் பணிப்புக்கு அமைய நாடு முழுவதிலும் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின்போது, 48,977 சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பாதாள உலகக்குழுவைச் சேர்ந்த ஜுலம்பிட்டிய அமரே கைதுசெய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

மத்திய மாகாணத்திலேயே அதிகளவானோர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் 7329 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.