வியாழன், 30 ஆகஸ்ட், 2012

ஆண்களுக்கு சமமான சுதந்திரம் கேட்டு மேலாடை இல்லாமல் பெண்கள் போராட்டம்: சர்வதேச அமைப்பு அறிவிப்பு

உலகம் முழுவதிலும் ஆண்களுக்கு கிடைக்கும் சமஉரிமை பெண்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பதற்காக, வினோதமான முறையில் போராட்டத்தை நடத்த சர்வதேச மகளிர் அமைப்பு திட்டமிட்டுள்ளது.

இந்த போராட்டத்தில் ஆண்களுக்கு எப்படி மேலாடைகள் அணிந்து கொள்வதற்கான சுதந்திரம் உள்ளதோ, அதேபோன்று பெண்களுக்கும் உரிமைகள் கிடைக்க வேண்டும் என்ற கருத்து வலியுறுத்தி கூறப்பட உள்ளது.

உலகம் முழுவதும் 30 நகரங்களில் நடக்கவிருக்கும் இப்போராட்டத்தில் பெண்கள் மேலாடையின்றி சுதந்திரமாக தங்கள் பொழுதைக் கழிக்க உள்ளனர். பெண்களை ஆண்களுக்கு சமமாக கருதும் நாடுகளான அமெரிக்கா, இஸ்ரேல், பிரான்ஸ், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அரசுகள் இதனை கண்டித்துள்ளன.

மேலும் இந்த போராட்டத்தில் ஈடுபடும் பெண்கள் சிறையில் அடைக்கப்படுவார்கள் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.