எந்தவொரு மூன்றாம் தரப்பையும் குறிவைப்பதற்காக அன்றி பிராந்திய பாதுகாப்பு மற்றும் உறுதிப்பாடு என்பவற்றை பேணுவதற்காகவே மக்கள் விடுதலை சேனை, தென் ஆசிய நாடுகளின் படைகளுடன் ஒத்துழைப்பை நாடுகிறது என இலங்கை வந்துள்ள சீன பாதுகாப்பு அமைச்சர் லியான் குவாங்லி இன்று தெரிவித்தார்.
சீனாவுடன் எல்லையை கொண்டுள்ள 14 நாடுகளில் ஐந்து நாடுகள் தெற்காசியாவிலுள்ளன என கூறிய அவர், இந்து சமுத்திரம் சீனாவின் முக்கிய வலு மற்றும் பொருள் போக்குரத்து பாதையாக உள்ளது என்றார்.
சீனா தென் ஆசிய நாடுகளுடனான உறவுகளுக்கு பெரும் முக்கியத்துவம் கொடுத்து வருகின்றது எனவும் அவர் குறிப்பிட்டார்.
அபிவிருத்தி மற்றும் பாதுகாப்பு உத்திகளை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதே சீனாவின் தேசிய பாதுகாப்பு கொள்கையாகும் என ஜெனரல் குவாங்லீ தெரிவித்தார்.
பாதுகாப்பு படைகளின் தலைமையகம் மற்றும் படை அதிகாரிகளின் கல்லூரியில் பேசிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
சீனா மக்கள் குடியரசை முதலில் அங்கீகரித்த ஒரு சில நாடுகளில் இலங்கையும் ஒன்றாகும். நாம் எப்போதும் நல்லுறவை கொண்டுள்ளோம் என அவர் தெரிவித்தார்.
சீர்த்திருத்தம் மற்றும் திறந்து விடுதலையின் பின் சீனாவின் பலமும் சர்வதேச செல்வாக்கும் பெருமளவு வளர்ச்சி கண்டுள்ளது. சர்வதேச சமுதாயத்தின் சில பகுதியினர் சீனா, ஆக்கிரமிப்பு பாதையில் செல்லவுள்ளதாக சந்தேகிக்கின்றனர். இவர்கள் 'சீனப் பயமுறுத்தல்' என்னும் கருத்தை பரப்பி வருகின்றனர் என அவர் கூறினார்.
சீனாவின் பாதுகாப்பு செலவினம் மிகவும் குறைந்த மட்டத்தில் உள்ளது. சீனாவின் நியாயமான பாதுகாப்பு ஏற்பாடுகளை 'இராணுவ பயமுறுத்தல்' என சிலர் கூறுகின்றனர் என அவர் குறிப்பிட்டார்.
இலங்கை அரசாங்கத்தின் தலைமையின் கீழ் கடும் உழைப்பும் விவேகமும் அன்பும் கொண்ட இலங்கை மக்கள் ஐக்கியப்பட்டுள்ள அரசியல் ஸ்திரத்தை பேணி வருவதுடன் மீள்கட்டுமானத்தையும் வேகமாக முன்னெடுத்து வருகின்றனர். பாரிய சாதனைகள் நடந்துள்ளன என ஜெனரல் மேலும் தெரிவித்தார்.