வியாழன், 30 ஆகஸ்ட், 2012

சீன பாதுகாப்பு அமைச்சர் ஜனாதிபதியுடன் சந்திப்பு! (படங்கள் இணைப்பு)

ஐந்து நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள சீன தேசிய பாதுகாப்பு அமைச்சர்ஜெனரல் லியாங்கு குவாங்லி தலைமையிலான  உயர் மட்டக்குழுவினர் நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஷபக்ஷவை அலரி மாளிகையில் சந்தித்து உரையாடினர்.

ஐந்துநாட்கள் இலங்கையில் தங்கியிருக்கும் இக்குழுவினர்  பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ- பாதுகாப்புப் படைகளின் பிரதம அதிகாரிகள்- முப்படைத் தளபதிகள் உட்பட முக்கியஸ்தர்கள் பலரையும் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.

இவர்கள் சபுகஸ்கந்தையிலுள்ள பாது காப்பு சேவைகள்- அதிகாரிகள் கல்லூரி- பனாகொட இராணுவ முகாம் ஆகிய வற்றுக்கு நாளை விஜயம் செய்யவுள்ளனர்.