இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஸ்தாபகரும் மறைந்த முதுபெருந் தலைவருமான செளமியமூர்த்தி தொண்டமானின் 99வது பிறந்த தின நிகழ்வுகள் இன்று (30.08.2012) கொழும்பிலும்- மலையகத்திலும் அனுஷ்டிக்கப்படவுள்ளன.
அமரரது பிறந்த தினத்தையொட்டி இன்று காலை 7 மணிக்கு கொழும்பு பழைய பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் அமைந்துள்ள அன்னாரது உருவச் சிலைக்கு இ. தொ.கா. பொதுச் செயலாளரும், கால்நடை வள மற்றும் கிராமிய சமூக அபிவிருத்தி அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் மலர் மாலை அணிவித்து பிரார்த்தனை செய்யவுள்ளார்.
இதன் பின்னர் 8 மணிக்கு இ. தொ. கா. தலைமை அலுவலகமான செளமிய பவனில் அமைந்துள்ள ஸ்ரீ விநாயகர் ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகளும் இடம்பெறவுள்ளன.
மலையகத்தில் பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடாகியுள்ள போதிலும் இந்நிகழ்வுகள் யாவற்றிலும் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான், இ. தொ. கா. தலைவரும் பிரதி அமைச்சருமான முத்து சிவலிங்கம், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பி. ராஜதுரை, மாகாண சபை அமைச்சர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், உள்ளிட்ட இ. தொ.கா.
உப தலைவர்கள், மாநகர சபை, நகர சபை, பிரதேச சபை ஆகியவற்றின் தலைவர்களும், அங்கத்தவர்களும், இ. தொ. கா. பிரதிநிதிகளும், அரசியல் அமைப்பாளர்கள், வர்த்தக பெருமக்கள், மகளிர் அணியினர் ஆகியோர் இதில் பெருமளவில் கலந்துகொள்வர்.