வியாழன், 30 ஆகஸ்ட், 2012

எக்காரணத்துக்காகவும் பரீட்சையை இரத்துச் செய்ய முடியாது

எந்தவொரு காரணத்திற்காகவும் நடந்து முடிந்த 5ம் தர புலமைப்பரிசில் பரீட்சை இரத்துச் செய்யப்படமாட்டாதென கல்வி அமைச்சின் செயலாளர் கோட்டாபய ஜயரத்ன குறிப் பிட்டுள்ளார்.

அத தெரண எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த அவர் இவ்வாறு தெரிவித்தார். இம்முறை நடந்து முடிந்த 5ம் தர புலமைப் பரிசில் பரீட்சை வினாத்தாள்கள் முன்னதாகவே வெளியாகிவிட்டதென இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றம் சுமத்தியது.   அதனால் பரீட்சை இரத்து செய்யப்பட வேண்டும் என அந்த சங்கம் கோரிக்கை விடுத்தது.

எனினும் ஆசிரியர் சங்கத்தின் கோரிக்கை போன்று பரீட்சையை இரத்து செய்ய முடியாதென கல்வி அமைச்சின் செயலாளர் அத தெரணவிடம் கூறினார். அத்துடன் வினாத்தாள்கள் முன்னதாகவே வெளியான விடயம் குறித்து குற்றப்புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை நடத்தி வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.