அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கான அபிவிருத்தித் திட்டங்களுக்கென 9 பில்லியன் ரூபாவை வழங்க ஐரோப்பிய ஒன்றியம் உடன்பட்டுள்ளது.
இவ் உதவியானது, 2012-2017 வரையிலான காலப்பகுதியில் ஐரோப்பிய ஒன்றியத்தின் நகர அபிவிருத்தி திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ளது.
இலங்கை அரசாங்கத்தினால் அடையாளம் காணப்படும் முக்கியத்துவம் வாய்ந்த திட்டங்கள் இவ்வுதவியின் கீழ் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
வறுமை ஒழிப்பு, குறைந்த வருமாணம் பெறும் மக்களின் அடிப்படை
உட்கட்டமைப்பு மற்றும் சேவைகளை வழங்குதல் மற்றும் உள்நாட்டு பொருளாதார அபிவிருத்திக்கு பயன்படுத்தப்படும் என பொருளாதார அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
