வியாழன், 30 ஆகஸ்ட், 2012

சிலாபம் முன்னேஸ்வரம் காளி கோயிலில் பலி பூஜை இம்முறை நடைபெறாது

சிலாபம் முன்னேஸ்வரம் காளி கோயிலில் எதிர்வரும் 1ம் திகதி நடைபெறவிருந்த பலி பூஜை இம்முறை நடைபெறாது என முன்னேஸ்வரம் ஆலய நிர்வாகம் அறிவித்துள்ளது.

ஜனாதிபதி ஊடகங்கள் மூலம் முன்வைத்த கோரிக்கைக்கு அமைய இந்த பலி பூஜை நிறுத்தப்பட்டுள்ளதாக ஆலய நிர்வாகம் அறிவித்துள்ளது.

எனினும் அடுத்து வருடம் பலி பூஜை இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் இருந்து கொண்டுவரப்பட்டுள்ள புத்தரின் புனித எழும்பு வட மேல் மாகாணத்திற்கு எடுத்துச் செல்லப்படுவதால் பலி பூஜையை நிறுத்துமாறு ஜனாதிபதி கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

(அத தெரண - தமிழ்)