புதன், 29 ஆகஸ்ட், 2012

அலுகோசு வெற்றிடங்களை நிரப்ப நேற்று நேர்முகப் பரீட்சை

மரண தண்டனை நிறைவேற்றும் அலுகோசு பதவி வெற்றிடத்தை நிரப்புவதற்கான நேர்முகப் பரீட்சை நேற்று ஆரம் பிக்கப்பட்டதாக சிறைச்சாலை மறுசீரமைப்பு அமைச்சு கூறியது. இந்தப் பதவிக்காக 178 பேர் விண் ணப்பித்துள்ளனர். 

 3 வருடங்களாக வெற்றிடமாக காணப் படும் அலுகோசு பதவிக்கான நேர்முகப் பரீட்சை 4 தினங்கள் நடைபெற உள்ளது. 3 வருடங்களாக இந்தப் பதவி வெற்றிடமாக காணப்படுவதோடு. 1976 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இலங்கையில் மரண தண்டனை நிறைவேற்றப்படவில்லை என்பது குறிப் பிடத்தக்கது.

நேர்முகப் பரீட்சை முடிந்தவுடன் அலுகோசு பதவிக்கும் அவரின் உதவியாளர் பதவிக்கும் தலா ஒருவர் நியமிக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்படுகிறது. 350 க்கும் மேற்பட்வர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது தெரிந்ததே.