புதன், 29 ஆகஸ்ட், 2012

நாகபாம்பை அறையில் வைத்திருந்த பெண்ணுக்கு விளக்கமறியல்.

கொள்ளுபிட்டியிலுள்ள இரவு விடுதியொன்றின் அறையில் நாகபாம்பொன்றை வைத்திருந்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள பெண்ணொருவரை நாளை வியாழக்கிழமை வரை விளக்கமறியலில் வைக்குமாறு  கொழும்பு கோட்டை நீதவான் கனிஷ்க விஜேரட்ன இன்று உத்தரவிட்டார்.

இந்த இரவு விடுதியில் பணியாற்றும் இப்பெண், இரு நாட்களாக இப்பாம்பை தன்னுடன் வைத்திருந்ததாக கொள்ளுபிட்டி பொலிஸாரில் இரவு விடுதியின் பாதுகாப்பு உத்தியோகஸ்தர் ஒருவர்  முறைப்பாடு செய்திருந்தார்.

மேற்படி அறையில் இருந்த ஏனைய பெண்கள் பாம்பை கண்டு அச்சமடைந்ததால் தான் முறைப்பாடு செய்வதாக மேற்படி பாதுகாப்பு உத்தியோகஸ்தர் தெரிவித்திருந்தார்.


இதையடுத்து சோதனை நடத்திய பொலிஸார், பாம்பை கைப்பற்றி தெஹிவளை  மிருகக் காட்சிசாலையில் ஒப்படைத்தனர். 

இப்பெண் மனநிலை பாதிக்கப்பட்டவராக தென்படுவதால் அவரை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.